எனக்கு யாரும் கோட்டா கோ கோம் மந்திரம் சொல்லித்தர தேவையில்லை- மனோ கண்டனம்.

எனக்கு யாரும் கோட்டா கோ கோம் மந்திரம் சொல்லித்தர தேவையில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரது முகப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இன்றைய ஜனாதிபதி கோதபாயவுக்கு எதிரான கோட்டா கோ கோம் போராட்டம் பல வடிவங்களில், காலிமுக திடலிலும், நாடெங்கிலும், நாடாளுமன்றத்திலும் நடக்கின்றன. எல்லாவற்றிலும் மனப்பூர்வமாக நாம் இருக்கிறோம். ஏனெனில் நாங்கள் கோட்டா கோ கோம் என்று போராட ஆரம்பித்தது, இன்றல்ல..! 2006ம் வருடத்தில், பலமிக்க பாதுகாப்பு செயலாளராக அவரை இந்நாடே தூக்கி வைத்து கொண்டாடி பிறகு பாற்சோறும் சாப்பிட்ட கடும் காலத்தில்… ஆகவே, எனக்கு (எங்களுக்கு) யாரும் கோட்டா கோ கோம் மந்திரம் சொல்லித்தந்து சிரமப்பட தேவையில்லை. 2006 முதல் சோரம்-விலை போகாமல் நாம் போராடினோம்..! இன்றும் போராடுகிறோம்..! இனியும் போராடுவோம்..! இந்த வரலாறு தெரிந்தவர்கள், அதை ஞாபகப்படுத்தி கொள்ளுங்கள். தெரியாதவர்கள், இனி தெரிந்துக்கொள்ளுங்கள். வாருங்கள், விலை போகாத நாம் அனைவரும் சேர்ந்து போராடுவோம்…!என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *