தேசிய ரீதியான போராட்டத்திற்கு வடமாகாண அதிபர், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை!

அதிபர், ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது ஆதரவினை வழங்குவதாகவும் அதேபோல் வட மாகாண அதிபர், ஆசிரியர்கள் குறித்த போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர்சேவை சங்கத்தின் செயலாளர் புயல்நேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசின் சகல  செயற்பாடுகளும் பல்வேறுபட்ட மாற்றங்களும் இந்த கொரோனா காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டது.

அதேபோன்று ஆசிரியர்கள், அதிபர்கள் இந்த காலத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதை தவறு என கூறுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது.

கொரோனா காலத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது என்பது மாணவர்களின் கல்வியில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.

வட மாகாணத்தில் 13 வலயங்கள் செயல் நிலையில் உள்ளன. சம்பள முரண்பாடு அதாவது 30 வருடங்களாக காணப்படுகிற சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காண வேண்டுமாயின் அனைத்து ஆசிரியர்களும் இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு சகலரும் இந்த போராட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டும். நமக்கு வெற்றி கிடைக்கும் வரை  போராட்டத்தை நாங்க முன்னெடுப்பதன் மூலம் தமக்கு உரிய உரிமைகளை மீட்டெடுக்க முடியும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *