தனிமைப்படுத்தல் விதிகளை மீறினால் மீண்டும் பயணக்கட்டுப்பாடு – மக்களுக்கு எச்சரிக்கை!

பொதுமக்கள் எதிர்வரும் வார இறுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டால், கடந்த காலங்களில் விதித்த கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்த வேண்டி வருமென பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வார இறுதியில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக மேலதிக பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த தினத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 51 ஆயிரத்து 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *