கிளிநொச்சியில் நுங்கு சுவைத்து மகிழ்ந்த அமெரிக்க தூதர்.

யாழிற்கான 2நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் யாழை வந்தடைந்த இலங்கைக்கான அமெரிக்க தூதர்ஜூலி சுங் இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில் நேற்றையதினம் காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்து ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார்.

அதன்பின்னர் சமயத் தலைவர்கள் யாழ் வணிகர் கழகத்தினர் வடமாகாண ஆளுநருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டதுடன் மாலை தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில் இன்றையதினம் காலை கிளிநொச்சி முகமாலைக்கு சென்று அங்கு நடைபெற்றுவரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டார்.

அத்துடன் முகமாலையில் அமரிக்க தூதருக்கு நுங்கு வழங்கப்பட்டது இந்நிலையில் அமெரிக் தூதர் ஜூலி சுங் நுங்கு குடித்து மகிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *