இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் நான் இல்லை: மைத்திரி

கொழும்பு ஏப் 26

இடைக்கால அரசின் புதிய பிரதமர் நான் அல்லன் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெறும். இடைக்கால அரசில் புதிய பிரதமருக்கு ஆதரவு வழங்கப்படும். அந்த பிரதமர் நான் இல்லை என்றும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகாவிட்டால், அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஆதரவு தெரிவிக்கப்படும் என சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *