
பொருளாதார செயன்முறையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட விசேடமான துறைகள், தமக்குத் தேவையான எரிபொருட்களை தனித்தனியாக இறக்குமதி செய்து பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், பெற்றோலிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாட்டின் சகல பொருளாதார நடவடிக்கைகளுக்கும் எரிபொருள் இன்றியமையாதது என்பதன் அடிப்படையில், குறிப்பிட்ட துறைகளுக்கு மாத்திரம் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும், தனித்தனியாகப் பயன்படுத்துவதற்கும் உரிமம் வழங்குவது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, பெற்றோலியப் பொருட்கள் இறக்குமதிக்காக முறையான வகையில் அடையாளம் காணப்படும் தரப்பினர்களுக்கு உரிமங்களை வழங்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக, 2002 ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றை உருவாக்குவதற்கு, சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

