விலையை அதிகரிக்காமல் சமையல் எரிவாயு விநியோகிக்க முடியாது – லிட்ரோ நிறுவனம்

சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே, விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாக இன்றைய தினம் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 2 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்திருந்தது.

எனினும்இ அந்த விலை அதிகரிப்பை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கவில்லை என அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *