புதினை சந்திக்கும் ஐ.நா தலைமைச் செயலாளர்

மாஸ்கோ, ஏப் 26

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் ரஷ்யா ஜனாதிபதி விளாதிமிர் புதினை மாஸ்கோவில் இன்று சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இருவருக்கும் இடையிலான இந்த் பேச்சுவார்த்தையின் போது, உக்ரேனின் மேரியோபோல் நகரின் மீதான முற்றுகை குறித்து கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு ரஷ்யா வெற்றியை அறிவித்த போதிலும், ரஷ்யப் படைகள் அசோவ்ஸ்டல் உலோகத் தொழிற்சாலையை கைப்பற்றமுடியவில்லை. அசோவ்ஸ்டலில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களை வெளியேற்றுவதற்கு ஒரு மனிதாபிமான வழித்தடத்தை உருவாக்க உத்தரவாதம் தர குட்டரஸிடம் உக்ரேன் வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஐ.நா தலைமைச் செயலாளர் எதிர்வரும் வியாழக்கிழமை உக்ரேன் தலைநகர் கீயவ் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அந்நாட்டு அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கியை சந்திக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *