யாழ். அரியாலையில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட பெண்

2 கிலோ கஞ்சாவுடன் பெண் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் அரியாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து கஞ்சா விற்பனையில் குடும்ப பெண் ஒருவர் ஈடுபட்டுவருவதாக மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினரிற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த பெண் பொலிஸாரினால் கண்காணிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் கஞ்சா போதைப்பொருளை வீட்டில் மறைத்துவைத்து விற்பனை செய்யும் தருணம் உபபொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினர் குறித்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

இதன்போது விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொதியினை அப் பெண்ணின் உடமையில் இருந்து பொலிஸார் மீட்டதுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண் அரியாலை பகுதியை சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் போதை பொருள் விற்பனையில் பெண்கள் ஈடுபடுவது அதிகரித்த நிலையில் கடந்த 6 மாத காலப்பகுதிகளில் யாழில் 8 பெண்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *