அரசியல் பொருளாதார நெருக்கடி தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை!

நாட்டில் கடந்த சில வாரங்களாக அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது நாட்டில் உருவாகியுள்ள அரசியல்,பொருளாதார மற்றும் சமூக ரீதியாகவுள்ள நெருக்கடியான நிலைமைகள் பற்றிய உண்மை நிலவரங்கள் தொடர்பாக பொதுமக்களைத் தெளிவூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை அமைச்சுக்களின் பங்கேற்புடன் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மூலம் நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *