யாழ்பாணத்தைச் சேர்ந்தவருக்கு உலக தமிழ் பல்கலைக்கழகத்தால் கலாநிதி பட்டம் வழங்கி வைப்பு
உலக தமிழ் பல்கலைக்கழகத்தினால் யாழ்பாணத்தைச் சேர்ந்த மெய்ஞஞான வைரவர் தர்மகர்த்தாவான ஐயாத்துரை கண்ணாவுக்கு,பாரம்பரிய வைத்தியர்க்கான கலாநிதி பட்டம் வழங்கி கெரவிக்கப்பட்டது .
இந்த பட்டத்தை பெற்றுகொண்டமைக்காக ஐயாத்துரை கண்ணாவுக்கு பாராட்டு வழங்கும் நிகழ்வொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வானது சீ.விக்னேஸ்வரன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அராலி கிழக்கு ,ஐயனார் முன்பள்ளி மண்டபத்தில் பி.ப 2.00 மணியளவில் நடைப்பெற்றது.
நிகழ்வில் Dr செ.பரமசிவன்பிள்ளை பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துள்ளார்.இதன் போது பட்ட பெற்றவர் ஊர் மக்களால் கெளரவிக்கப்பட்டார்.




