ஹிசாலினியின் மரணம் – முன்னாள் அமைச்சரின் மனைவி தலைமறைவு

உயிரிழந்த சிறுமி ஹிசாலினியின் மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சரின் மனைவி தலைமறைவாகியுள்ளார்.

டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய ஹிசாலினி என்ற சிறுமி கடந்த வருடம் முதல் குறித்த அரசியல் பிரபலத்தின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த வாரம் தீக்காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அதன் பின்னர் சமூக மட்டத்தில் சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

Advertisement

இந்த நிலையில் சிறுமி பணி புரிந்த குறித்த அரசியல் பிரமுகரின் வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட ஆயத்தங்கள் மெற்கொள்ளப்பட்டிருந்தன.

இவ்வாறான சமயத்திலேயே குறித்த அரசியல் பிரபலத்தின் மனைவி தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply