
கொழும்பு, ஏப் 26
அரசியல் கட்சிகளின் பலதரப்பட்ட கொள்கைகளுக்கு மதிப்பளிக்கும் அதேவேளையில்,பாராளுமன்றத்தில் அல்லது வேறு ஏதேனும் இடைக்கால வடிவில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்துடன் கூடிய அமைச்சரவையை அமைப்பதன் தேவை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஒரு ஆலோசனை நடவடிக்கையில் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

