
நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் பல பாகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை கடந்த 17 நாட்களாக ஜனாதிபதி செயலகம் முன்னால் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்றுமுதல் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாருக்கு பரிந்துரை செய்துள்ளது.
கருத்து சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான உரிமை ஆகியவற்றை பாதுகாப்பது போலவே, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு போதுமான பாதுகாப்பையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றினூடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளது

