தொடரும் பொருளாதார நெருக்கடி; நாட்டை விட்டு வெளியேற தயாராகும் மக்கள்!

நாட்டில் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்கின்றது. இதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தொடரும் மின்தடை போன்ற காரணங்களால் நாட்டின் பல்வேறு துறைகளும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றது.

மறுபுறம் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து வேலைவாய்ப்பு இல்லாதோரின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் நாட்டினை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றது.

ஒருபுறம் சட்டவிரோதமாக படகுகளில் இந்தியா நோக்கி செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்ற நிலையில் கொழும்பில் அமைந்துள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கும் நாளாந்தம் பெருமளவு மக்கள் கடவுச்சீட்டை பெற்று வெளிநாடுகளுக்கு செல்வதற்காக நீண்ட வரிசையில் குவிந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *