ஐபிஎல் போட்டிகளில் ஆயிரம் டாட் பந்துகளை வீசி பிராவோ புதிய சாதனை

மும்பை,ஏப் 26

15-வது வருடமாக நடைபெறும் ஐபிஎல் தொடரில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகின்றனர். இதில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பிராவோ சென்னை அணிக்காக 2011 ஆம் ஆண்டு முதல் ஆடி வருகிறார்.

பஞ்சாப் அணிக்கு எதிராக திங்கட்கிழமை நடந்த போட்டியில் சென்னை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் பந்துவீச்சின் போது பிராவோ ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக ஆயிரம் டாட் பந்துகளை (ரன் விட்டு கொடுக்காத பந்து) வீசி சாதனை படைத்தார்.

ஐபிஎல்-லில் இந்த சாதனையை படைக்கும் 13-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் அதிக டாட் பந்துகளை வீசி முதல் இடத்தில் இந்தியாவின் புவனேஸ்வர் குமார் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *