கன்னட இயக்குனரின் புதிய படத்தில் நடிக்கும் சந்தானம்!

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த்ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சந்தானம் நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.

தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கிறார்.

இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தான்யா ஹோப் நடிக்கவுள்ளதுடன், பாக்யராஜ், செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *