முஸ்லீம் பிரதிநிதிகளையும் அமெரிக்க தூதுவர் சந்தித்தார்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்   யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறியும் நோக்கில் மக்கள் பணிமனையின் தலைவர் மௌலவி எஸ்.ஏ.சுபியானுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

நாவாந்துறை வீதியில் அமைந்துள்ள மக்கள் பணிமனை அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதில் மீளக்குடியேறியுள்ள மக்களுக்கான காணி இல்லாத பிரச்சினை, காணி இருந்தும் வீட்டுத்திட்டம் இல்லாத பிரச்சினை, வாழ்வாதாரம் இல்லாத நிலை தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டதுடன் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னர் உள்ள அரசாங்கமோ தற்போதுள்ள அரசாங்கமோ கருத்திற்கொள்ளவில்லை. இது தொடர்பாக முஸ்லிம் வாழ் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம் என யாழ் முஸ்லிம் மாவட்ட மக்கள் பணிமனையின் தலைவர் மௌலவி எஸ்.ஏ.சுபியான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *