30 வருட யுத்தத்திலும் நாம் நன்றாக வாழ்ந்தோம்; எமக்கு செய்த பாவம் சும்மா விடாது யாழ் வாசியின் ஆதங்கம்(வீடியோ இணைப்பு)

நாட்டில் கடந்த சிலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில் தற்போதைய நாட்டு நிலவரம் தொடர்பில் யாழ் வாசி ஒருவர் சமூகம் மீடியாவுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்:

யாழ்ப்பாணத் தமிழன் ஒருநாளும் பசி பட்டினி என்று இருக்க மாட்டான்.கூளோ கஞ்சியோ குடித்து அல்லது இளநீர் குடித்து என்றாலும் உயிர் வாழ்வான்.அதற்கு எல்லாம் பழக்க பட்டவன் தமிழன்.

இப்போது பிரச்சினை சிங்கள மக்களுக்கு.எங்களுக்கு செய்த கருமத்துக்கு அவர்கள் இப்போது அடிவாங்குகிறார்கள்.கோட்டா இருக்கும் மட்டும் நாங்கள் தப்ப முடியாது.30 வருட யுத்த காலத்தில்,இந்த இடம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அப்போது கூட நாம் இப்படி கஸ்டப்படவில்லை.எல்லா பொருட்களும் தாரளமாக கிடைத்தது.எல்லாமே சீராக நடைபெற்றது என்றார்.

வீடியோ இணைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *