
வீரக்கெட்டிய பகுதியில் கடந்த 19ஆம் திகதி 14 வயது சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபருடன் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் மறைந்திருந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தொடர்பில் வீரக்கெட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் வலஸ்முல்ல மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.