ரிஷாட்டின் மனைவியிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான சிறுமி மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்றுள்ள பொரளை பொலிஸை சேர்ந்த விசேட குழு ஒன்றே அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை நேற்றைய தினம் (21) டயகம பகுதியில் வைத்து குறித்த சிறுமியின் தாய், சிறிய தந்தை, சகோதரன் மற்றும் சகோதரியிடம் 10 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *