அரசின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனான அவசர கூட்டத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் கெரவலபிட்டி மின்னுற்பத்தி நிலையத்தில் அரசுக்கு சொந்தமான 40 வீதமான பகுதியை அமெரிக்காவுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.
கெரவலபிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்காவுக்கு வழங்கும் அரசின் முடிவுக்கு கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இன்றைய கூட்டத்தில் இந்த எதிர்ப்பை 11 பங்காளிக் கட்சித் தலைவர்களும் கூட்டாகத் தெரிவிக்கத் தயாராகி வருவதாகத் தெரியவருகிறது.
மேலும், இந்திப்பின்போது இவ் விவகாரத்தில் சாதகமாக முடிவு ஏற்படும் என எதிர்பார்ப்பதாக அரசின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பின்னர், அவருடனும் இந்த விடயம் குறித்து பேசவுள்ளதாகவும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, கெரவலபிட்டி மின்னுற்பத்தி நிலையத்தில் அரசுக்கு சொந்தமான 40 வீதமான பகுதியை அமெரிக்காவுக்கு வழங்கும் அரசின் முடிவு குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிரதமரைச் சந்தித்து நீண்ட விவாதத்தில் ஈடுபட்டார்.