
கொழும்பு,ஏப் 27
அரச ஊழியர் சங்கங்கள் இணைந்து நாளை முன்னெடுக்கவுள்ள பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் பஸ் ஊழியர்கள் , இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மற்றும் தனியார் பேரூந்து சேவை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பேரூந்து சேவைகள் நாளை முதல் வழமைக்கு திரும்புவதாக இலங்கை போக்கு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாளை முதல் இலங்கை போக்குவரத்து பஸ்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

