ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான பயிற்சி SOND நிறுவனத்தினால் இன்று நடாத்தப்பட்டது.
இப்பயிற்சி நெறியானது நிறுவனத்தின் நிறைவேற்றுப்பாளர் ச.செந்துராசா தலைமையில் நடைபெற்றது.
குறித்த பயிற்சி நெறியினை வளவாளர்களான ஜோய் ஜெகார்த்தனன் மற்றும் டினோஜா ஆகியோர் நடாத்தினர்.
இப்பயிற்சியில் இளையோர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 50 பேர் கலந்து கொண்டனர்.

