யாழ்ப்பாணம் – குருநகர் இறங்குதுறையில் 1,100 கிலோ மஞ்சள் கட்டிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
குருநகர் ஐந்து மாடி கட்டடத்தொகுதிக்கு அண்மித்த கடற்பரப்பில் கைவிடப்பட்டிருந்த படகொன்றில் இருந்தே மஞ்சள் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அவை இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டன.
மேலும், இது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் மஞ்சள் பொதிகளையும் சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.