ஜனாதிபதியின் கருத்து வாய்சொல்லாகவே இருக்குமா? – அருட்தந்தை ஜோசப்மேரி

அமெரிக்காவிற்கு சென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்தானது வாய்சொல்லாகவே இருக்கும் நடைமுறையிலிருக்காது என அருட்தந்தை ஜோசப்மேரி தெரிவித்துள்ளார்.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இதற்கு முன்னிருந்த அரசாங்கம் மனித உரிமை மீறப்பட்டுள்ள வேளையில் நாங்கள் அதனை ஆவணம் செய்வோம் என்று ஐ.நாவில் கூறியிருந்தார்கள். அதுவும் கிடப்பில் கிடந்ததுடன், இந்த அரசையும் குற்றம்சாட்டியிருந்தார்கள் அத்துடன் எமது மக்களை விலைபேசி வந்துவிட்டார்கள்.

இதே பாணியில் ஜனாதிபதியும் அமெரிக்காவில் கூறியது பழைய அரசை போன்று வெறுமனே வாய் சொல்லே தவிர செயல்முறையில் நடக்குமா என்பது கேள்விக்குறி.

ஆகவே கண்துடைப்புக்காக இதை செய்கின்றார்களா? மனதார உணர்ந்து செயற்படுகின்றார்களா? இந்த மக்கள் நிம்மதியாக வாழ சிங்கள மக்களுடன் கை கொடுத்து வாழ இவர்கள் செய்ய வேண்டியது காலத்தின் தேவை.

ஆனால் வெளியில் இவ்வாறு பேசிவிட்டு மீண்டும் நாட்டுக்கு வந்து அவற்றை மறந்து விடுகின்றனர். இதை தான் நான் கடந்த காலங்களிலிருந்து பார்த்து வருகின்றேன்.

நாட்டில் உள்ள மக்களை பாகுபாடு இல்லாமல்

ஜனாதிபதி கூறிய வார்த்தையை செயற்படுத்துபவராக இருந்தால் அவர் ஒரு பெயர் போன தலைவராவார். அவர் மக்களை இணைத்து செயற்பட வேண்டும் என்றும் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *