வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த ச.செல்வேந்திரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ச.சதிஸ் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், சுயேட்சைக் குழு உறுப்பினர் ச.செல்வேந்திரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான தற்போதைய உப தவிசாளர் கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்பட்ட சதிஸ்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுயேட்சைக்குழு உறுப்பினருக்கு ஆதரவாக வாக்களித்ததால் கூட்டமைப்பு தோல்வி அடைந்தது.
சுயேட்சைக் குழு சார்பாக போட்டியிட்ட செல்வேந்திராவுக்கு 9 வாக்குகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.