மைத்திரி- பங்காளிக் கட்சி இடையே நேற்று இரகசிய பேச்சு வார்த்தை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில், அரசாங்கத்தின் பல பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்துரையாடல் ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் அவசரக் கூட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று நடத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் நாட்டின் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைப்பது பற்றி விரிவாக விவாதிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்தில் இணைந்துள்ள மற்றைய கட்சிகளின் தலைவர்களும் கெலவரபிட்டிய மின் நிலையம் தொடர்பாக பிரதமருக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கத் தயாராகி வருகின்றனர் எனத் தெரியவருகின்றது.

இதுதொடர்பில், கொழும்பு மகாகமசேகர மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் அரசாங்கத்தின் பல பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் உட்பட அரசியல்வாதிகள் குழு நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜெயந்த சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, கெவிடு குமாரதுங்க, வீரசுமன வீரசிங்க, கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் மைத்திரிபால சிறிசேனா ஆகியோர் ஒரு இரகசிய பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு சென்று திரும்பிய பின்னரும் கூட, கட்சித் தலைவர்கள் மின் உற்பத்தி நிலையம் குறித்து கலந்துரையாடல் நடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *