பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி இரண்டு ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்றுள்ளது.
2021 ஐ.பி.எல். தொடரின் 32 ஆவது லீக் போட்டி நேற்றிரவு டுபாயில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.
குறித்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு ராஜஸ்தான் அணியை பணித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் வீரர்களின் தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் நிறைவில் 185 ஓட்டங்களை குவித்தது அந்த அணி.
மேலும், 186 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியும் அதிரடியான ஆட்டத்தால் பதிலடி கொடுத்தது.
எனினும், அவர்களால் 20 ஓவர்களின் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 183 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.
இதனால் பஞ்சாப் கிங்ஸ் வெறும் இரண்டு ஓட்டங்களால் தோல்வியைச் சந்தித்தது.
இதேவேளை, ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு டுபாயில் ஆரம்பமாகும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன.