நாட்டின் தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆகவே, பாடசாலைகளில் பின்பற்றப்பட வேண்டிய தொடர் சுகாதார வழிகாட்டுதல்கள் கல்வி அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் இயக்குநர் அசேலா குணவர்தன தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான முடிவு கல்வி அதிகாரிகளால் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாடசாலைகளை தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளரின் வேண்டுகோளைத் தொடர்ந்து, இச் சுகாதார வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
இதனிடையே, பாடசாலைகளை திறப்பதற்கு அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும், சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அசேலா குணவர்தன தெரிவித்துள்ளார்.