திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளம் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் ஒருவரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று (22) உத்தரவிட்டார்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கந்தளாய் பகுதியிலுள்ள திருமணமான பெண்ணொருவரை, கணவன் இல்லாத சந்தர்ப்பத்தில் இளம் பெண்ணை துஷ்பிரயோகத்திற்குட் படுத்தியதாக தெரிவித்து கணவனால் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட இளம் பெண் வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.