திருமண நிகழ்வுகளால் நாடு பேராபத்தை சந்திக்கபோகிறது – எச்சரிக்கும் இராணுவ தளபதி

நாட்டின் சமகால நிலமையை கருத்தில் கொண்டு சுகாதார வழியாட்டல்களுக்கு அமைவாக 150 பேருடன் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதுவே மோசமான நிலையை உருவாக்ககூடும். என அஞ்சுகிறோம்.

மேற்கண்டவாறு இராணுவ தளபதியும் தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். இது குறித்து இராணுவ தளபதி மேலும் கூறியிருப்பதாவது,

150 பேரின் பங்குபற்றுதலுடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பினும், குறித்த எண்ணிக்கையை விட அதிகளவானோர் திருமண நிகழ்வுகளில் பங்கேற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Advertisement

எனவே, பொதுமக்கள் இவ்வாறு சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்படும் போது, எதிர்காலத்தில் திருமண கொத்தணி உருவாகும் ஆபத்து இருப்பதாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *