தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம்;முற்றாக முடங்கிய யாழ் நகர்.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்றையதினம் அரச மற்றும் தனியார் துறையின் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கள் இணைந்து மேற்கொள்ளும் இன்றைய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய வேலைநிறுத்த போராட்டம் காரணமாக யாழ் நகர் முற்றாக ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

அனைத்து வணிக நிலைகளும் மூடப்பட்டுள்ளதுடன் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றது. இதேவேளை பொதுப்போக்குவரத்து சேவை வழமைபோல முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *