இலங்கை நடிகை அனுஷா சோனாலி காலமானார்

கொழும்பு, ஏப் 28

இலங்கை நடிகை அனுஷா சோனாலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 47 ஆவது வயதில் காலமானார்.

களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக நடிகை உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் இறப்பதற்கு முன்பு சில காலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *