ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது

சிறுமியை வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்தோடு ரிஷாட்டின் மனைவி ஷெஹாப்தீன் ஆயிஷா (46), மனைவியின் தந்தையான மொஹமட் ஷெஹாப்தீன் (70) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சிறுமியை கொழும்புக்கு அழைத்துவந்து பணிக்கு அமர்த்திய தரகரான டயகம பிரதேசத்தைச் சேர்ந்த பொன்னையா பண்டாரம் அல்லது சங்கர் எனப்படும் 64 வயதான தரகரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply