சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக தயங்கப் போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் முற்போக்கு கூட்டணி இதுவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கீழான கூட்டணியில்தான் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியிடம் சில கோரிக்கைகளை முன் வைத்திருப்பதாகவும், அவை நிறைவேற்றப்படாத பட்சத்தில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகத் தயங்கப்போவதில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், வரும் தேர்தல்களில் தனித்தே போட்டியிட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.