நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அதனடிப்படையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார துறை ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த போராட்டம் நண்பகல் 12 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி, அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட விடுமுறை வழங்க வேண்டும்;, கடமைக்கு சமூகமளிக்காத இடையூறுகள் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு, அருகிலுள்ள வைத்தியசாலைகள் அல்லது வைத்திய நிலையங்களில் கடமையாற்றுவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் சம்பள அதிகரிப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.