கடல் தங்கம் என்று அழைக்கப்படும் விலையுயர்ந்த மீன்களைப் பிடித்து மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு மீனவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆக மாறி இருக்கிறார் சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
ஆனால், நம்பித்தான் ஆகவேண்டும். பல்கார் பகுதியில் உள்ள மீனவர்களின் வலையில் சிக்கிய தங்க மீன்களால், அவர்களது வாழ்க்கையே மாற்றம் அடைத்து விட்டது.
இச் சம்பவம் குறித்து தெரியவருகையில்,
மீன் பிடி தடை காலம் முடிந்ததையடுத்து பல்கார் பகுதியில் வசிக்கும் மீனவரான சந்திரகாந்தா ரிக் என்பவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து பாத்வான் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு இருக்கின்றார்.
அப்போது சந்திரகாந்த விரித்த வலையில் தங்க மீன்கள் என அழைக்கப்படும் பெரிய அளவிளான 180 கிலோ கிராம் கோல்ட் மீன்கள் அவருடைய வலையில் சிக்கி இருக்கின்றன.
இதைப்பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய் உள்ளனர்.
அதற்குப் பிறகு கரைக்கு கொண்டு வரப்பட்ட இந்த மீன்கள் முன்வைக்க பின்னர் ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய்க்கு இந்த மீன்கள் ஏலத்திற்கு விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அழகு சாதன பொருட்கள் மற்றும் மருந்துகள் தயாரிக்க பயன்படும் இந்த வகை மீன்களுக்கு, ஹாங்காங் மலேசியா தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மவுசு அதிகம் என்பதால் இந்த வகை மீன்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கின்றார்கள்.
இவ்வாறு, ஒரே நாளில் லட்சாதிபதியான மீனவர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.