குருநாகல் மாவட்டம், நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிஉல்ல வீதி – பொதுகொல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கார் ஒன்றின் பின்னால் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற கோன்வெள பிரதேச்தைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில், நாரம்மல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அவர் உயிரிழந்தார் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இச் சம்பவம் தொடர்பில் நாரம்மல பெரிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.