
அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிய 3 பேர் கைது!
பளை மற்றும் முகாமாலைப் பகுதிகளில் அனுமதிப் பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மணல் ஏற்றுவதற்குப் பயன்படுத்திய வாகனங்களும் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படவுள்ளன.
பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கத்தார் வயல் பகுதியில் அனுமதிப்பத்தரிம் இன்றி மணல் ஏற்றிய இருவர் கைது செய்யப்பட்டனர். மணல் கடத்தலுக்கு அவர்கள் பயன்படுத்திய உழவியந்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
அதேபோல் முகமாலைப் பகுதியில் மணல் ஏற்றிய ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றியுள்ளார். டிப்பர் வாகனமும் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படவுள்ளது.