
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 40 சுகாதார தொழிற்சங்கங்களால் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இன்று மதியம் 12 மணி முதல் 1 மணி வரை இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா விசேட கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமை, சுகாதார ஊழியர்களுக்குத் தேவையான போதியளவு உபகரணங்களை வழங்காமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அகில இலங்கை சுகாதார சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த குருகே தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடித் தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.




