வவுனியா, ஏ9 வீதி ஊடாக நகரப்பகுதிக்கு அனுமதிப் பத்திரமின்றி மண் ஏற்றிச் சென்ற 4 டிப்பர் வாகனங்கள் இன்று வவுனியா வனதுறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளன.
மேலும், வவுனியா வனத்துறை அதிகாரிகளால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது 4 டிப்பர் வாகனங்கள் முறையான வழி அனுமதிப் பத்திரமின்றி மண் ஏற்றிச் சென்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த 4 டிப்பர் வாகனங்களும் வனத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளமையுடன், அதன் சாரதிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நான்கு பேரையும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


