கொரோனா சடலத்தின் பெட்டியை உடைத்த உறவினர்! புத்திஜீவிகள் விடுத்த கோரிக்கை

கிளிநொச்சியில் கொவிட் ஒழிப்பு விதிகளை மீறிய நபரை கைது செய்ய வேண்டும் என புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்றைய தினம் இடம்பெற்ற விரும்பத்தகாத செயல் தொடர்பில் அவர்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து இன்றைய தினம் சடலம் ஒன்று தகனம் செய்யப்படுவதற்காக வவுனியாவிற்கு எடுத்து செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சி பரந்தன் பகுதியில் உயிரிழந்த ஒருவரது சடலமே இவ்வாறு எடுத்து செல்லப்படுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சடலம் சுகாதார முறைகளிற்கமைவாக பெட்டியில் இடப்பட்டு எடுத்து செல்லப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில், உயிரிழந்தவரின் உறவினர் என நம்பப்படும் ஒருவரால் பெட்டி உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தினால் உரிய நேரத்திற்கு குறித்த சடலத்தை வவுனியாவிற்கு எடுத்த செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், குறித்த சடலத்தை மீண்டு சுகாதார முறைப்படி வேறு ஒரு பெட்டியில் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களிலும் இடம்பெறாது இருக்க சுகாதார துறையினரும், பொலிசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றது.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவரின் சடலம் இறுதி அஞ்சலிக்காக உதயநகரில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பல்வேறு தரப்பினராலும் விசனம் வெளியிடப்பட்டிருந்தது.

வடக்கில் பிரபல வைத்தியர் ஒருவரின் தற்துணிவு செய்ற்பாட்டின் தொடர்ச்சியாகவே இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மத்தியில் இடம்பெறுவதற்கான காரணங்களாகவும் அமைந்துள்ளன.

எனவே, மாவட்டத்தில் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள கொவிட் தடுப்பு செயலணி, இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாது இருக்கும் வகையில், தொடர்புபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *