நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் 92 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நேற்று உயிரிழந்தவர்களில் 41 பெண்களும் 51 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த 5 நாட்களுக்குள் 100க்கு குறைவான கொரோனா மரண எண்ணிக்கை இன்றைய தினம் பதிவானது.
அதன்படி, குறித்த 5 நாட்களில் கடந்த 19ஆம் திகதி 103 கொரோனா மரணங்கள் பதிவானது.
மேலும் மற்றைய நான்கு தினங்களில் 84, 93, 66, 92 என்றவாறு கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.