மாற்று திறனாளிகளுக்களுக்கான வாழ்வாதாரம் தொடர்பில் இன்றையதினம் (22.09) இணையவழி வாயிலாக பங்குதாரர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மாற்று திறனாளிகள் வாழ்வாதார ரீதியாக பெரும் சிரமத்தினை எதிர் நோக்குகின்றனர்.
எனவே வாழ்வாதார ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை களைந்து அவர்களுக்கான வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினரின் ஏற்பாட்டில் இணையவழி வாயிலாக இன்றையதினம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் பெண்தலமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதாரம், மாற்றுதிறனாளிகளுக்கான வாழ்வாதாரம், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற வாழ்வாதார திட்டங்கள், அவற்றினை அணுகுவதற்கான வழிமுறைகள், மாற்றுதிறனாளிகளுக்கான நிலைத்திருக்ககூடிய வாழ்வாதார உத்திகள், மாற்று திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கான ஆலோசனைகள், பரிந்துரைகள் தொடர்பான விடயங்கள் சமூகசேவை உத்தியோகத்தர் தசாந்தி , மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் நிருஷரணி ஆகியோரால் இணைய வழியூடாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இக்குறித்த கலந்துரையாடலில் பெண்கள் அமைப்பினர், மாற்றுதிறனாளி அமைப்பினர், இளையோர் குழுக்கள் மற்றும் விழுது உத்தியோகத்தர்கள் என 50க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.