நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது
மன்னார் நகர் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் உட்பட்ட அனேக கடைகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் நகர பகுதியை நோக்கிய மக்களின் வருகையும் அதிகரித்துள்ளது
நீண்ட நாட்களாக ஊரடங்கு தளர்த்தப்படாமல் நீடித்து வருகின்ற நிலையில் மக்களாகவே மன்னார் மாவட்டத்தில் ஊரடங்கை தளர்த்தியுள்ளனர்
மரக்கரி விற்பனை நிலையங்கள் மீன் சந்தைகள் இலந்திரனியல் விற்பனை நிலையங்கள் அனைத்தும் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்
மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள போதிலும் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உட்பட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பறுவதை அவதானிக்க கூடியதாக உள்ளமை குறிப்பிடதக்கது.








