20 – 30 வயதுக்கு உற்பட்டவர்களுக்கன சைனோபார்ம் தடுப்பூசி ஏற்றப்பட்டது

புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட 20 – 30 வயதுக்கு உற்பட்டவர்களுக்கான முதலாவது டோஸ் சைனோபார்ம் தடுப்பூசி இன்று புதன்கிழமை ஏற்றப்பட்டது.

20 – 30 வயதுக்குற்பட்ட 1778 பேர் சைனோபார்ம் முதலாவது டோஸ் தடுப்பூசியை ஏற்றியுள்ளதாக புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாளயம் தெரிவித்தது.

அத்தோடு குறித்த தடுப்பூசி ஏற்றும் பணி புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மேலும் ஊரடங்கு நேரத்திலும் அதிகளவிலானவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசியைப் பெருவதற்காக நீண்ட வரிசையில் நின்றதை அவதானிக்க முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *