ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் நடராஜனுக்கு கொரோனா உறுதி

தமிழகத்தைச் சேர்ந்தவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக ஆடிவருபவருமான டி.நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் டி.நடராஜன். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐ.பி.எல். தொடர்பில் நடராஜன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், நடராஜனுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டத்தில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *