கல்முனை மாநகரசபையில் நான்கு மாதங்களாக அமர்வு இல்லை- உறுப்பினர்கள் கடும் விசனம் – video

கல்முனை மாநகரசபையில் நான்கு மாதங்களாக அமர்வு இல்லை உறுப்பினர்கள் கடும் விசனம்video

கல்முனை மாநகரசபை நான்கு மாதங்களாக அமர்வு நடத்தப்படாமல் இழுத்டிக்கப்படுகின்றது. எமக்கு அமர்வுக்கென கடிதங்கள் அனுப்பப்படுகின்றுது சபைக்கு வந்தால் அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றார்கள். மேயரின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கின்றோம் என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் தங்கள் விசனத்தை தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் கந்தசாமி சிவலிங்கம் கருத்து தெரிவிக்கையில்,
22.09.2021 இன்று புதன்கிழமை 2.30 மணிக்கு அமர்வு உள்ளதாக கடிதம் மூலம் அறிவித்திருந்தனர். நாங்கள் சபைக்கு வருகை தந்தோம் ஆனால் மேயர் வரவில்லை சபையின் செயலாளருக்கு சபை அமர்வு இல்லை என கூறப்பட்டதாக அறிவித்தார். இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெறுகிறது கடந்த மூன்று நான்கு மாதங்களாக சபை அமர்வு இடம்பெறவில்லை.

ஆனால் இலங்கையில் ஏனைய உள்ளுராட்சி மன்ற அமர்வுகள் மாதாந்தம் நடைபெறுகிறது. முக்கிய விடயங்கள் அவ்வப்போது சூம் செயலி மூலமும் இடம்பெறுகிறது. அவ்வாறே ஏனைய திணைக்களங்களும் மக்களின் நன்மை கருதி நிலைமைக்கேற்ப செயற்படுகின்றார்கள். இந் நிலையில் இவ்வாறு உறப்பினர்களாகிய நாங்கள் வருவதும் அமர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டதும் திருப்புவதும் கல்முனை மாநகர சபைக்கு அழகல்ல.

தற்போது நாட்டில் கொவிட் நிலைமைகளால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றார்கள் நாங்கள் மக்களுக்கு அவசர சேவைகளை செய்ய வேண்டிய நிலையில் இவ்வாறு நடந்து கொள்வது வேதனையான விடயம். அடுத்த மாத அமர்வையாவது நடத்த வேண்டும் என கல்முனை மேயரை கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். மனாப் கூறுகையில்
22.09.2021 இன்றைய அமர்வுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது சபை செயலாளருடன் காலை தொடர்பு கொண்டு கேட்டபோதும் சபை நடக்கும் என்ற சொன்னார். இன்று வந்தபோது கூட்டம் நடைபெறாது என்று அறிவிக்கின்றனர்.

தொடர்ச்சியாக நான்கு மாதங்களாக கூட்டம் நடைபெறவில்லை மக்களின் பிரச்சனைகள் பேசப்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. நாட்டில் பல விடயங்கள் சுகாதார நடைமுறைகளுடன் நடைபெறும்போது கல்முனை மாநகர சபை அமர்வை மட்டும் மேயர் தவிர்த்து வருகின்றார்.

ஏனைய மாநகரசபைகளில் அமர்வுகள் நடைபெறுகின்ற நிலையில் நாடாளுமன்றம் கூட நடைபெறுகின்றது எமது சபை அமர்வுக்கு அறிவிக்கப்பட்டும் முன்னறிவித்தல் இன்றி சபை அமர்வுக்கு வந்ததும் அமர்வு இல்லை என அறிவிக்கப்படுகின்றது. மக்களின் பிரச்சனைகள் குறைபாடுகளை பேசி தீர்க்க வேண்டி இருந்தும் அதற்கு இடம் அளிக்கப்படவில்லை.

இங்கு உறுப்பினர்கள் நாங்கள் இரண்டாவது தடுப்பூசியையும் போட்டுள்ளோம். கல்முனை மாநகரசபையில் பல கூட்டங்கள் சமூக இடைவெளி இல்லாமல் நடைபெறுகின்றது ஆனால் மக்களின் பிரச்சனைகளை பேசி அதற்கான தீர்வுகளை காண சபை அமர்வை மட்டும் சுகாதார நடைமுறைகளுடன் நடாத்த என்ன தயக்கம்? இந்த செயற்பாடு மனவேதனையானது என்றார்.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *