திருச்சி சிறப்பு முகாமில் உள்ள கைதிகள் தங்களுக்கு பொது மன்னிப்பை வழங்குமாறு கோரி இன்றுடன் 43 நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்கள், இந்திய கடவுச் சீட்டை எடுக்க முயற்சித்தமைக்கும், இந்திய நுழைவுச் சீட்டு காலாவதியான காரணத்தாலும், எல்லை கடந்து மீன் பிடிக்க வந்த குற்றத்திற்காகவும் 2 வருடங்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விடுதலைக்காக போராட்டதை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்..
“தொடர் கதையாய் தொடரும் எங்கள் உடலுக்கும் உணர்வுக்குமான பெரும் போராட்டம், தொடரும் போராட்டத்தில் விடுதலை கிடைக்குமா எனும் பயம் தொற்றிக் கொள்ள, உணர்வு கட்டளை யிடுகிறது உயிர் மாய்த்துக் கொள் என, முயன்றோம், ஆனால், அதிலும் தோற்று போனோம், தோல்வியே சலித்துப் போய் விட்டது, எங்கள் தோல்வியின் பட்டியல் கண்டு, ஏன் வாழ வேண்டும் என கேள்விகள் தோன்றும் போது, மனம் முழுதும் அழுகுரல் கேட்கிறது.

கைகூப்பி கேட்கிறோம் எங்கள் அழுகுரலுக்கு விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
